இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில்  சிறப்புக் கலைமாணி கற்கைநெறியானது மானிடவியல் மற்றும் சமூகவிஞ்ஞானங்கள்   பீடத்தின் மொழிக் கற்கைகள் துறையினால் நடத்தப்படுகிறது. இது நான்கு வருட   கற்கைநெறியாகும். தற்போது நீங்கள் மட்டம் நான்கிற்கு வருகை தந்துள்ளீர்கள். LEU 4315 - இடைக்காலத் தமிழ் இலக்கியம் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 04, பருவம் 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. மட்டம் 4இல் இருந்து 5இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்திசெய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 3இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களையும் (பதிவு செய்த அனைத்து பாடங்களும்) மட்டம் 4இல் பிரதான பாடங்களில் குறைந்தது 15 திறமை மட்டங்களையும் பெற்றிருத்தல் கட்டாயமாகும்.