இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில்சிறப்புக் கலைமாணி கற்கைநெறியானது மானிடவியல் மற்றும் சமூகவிஞ்ஞானங்கள்பீடத்தின் மொழிக்கற்கைகள் துறையினால் நடத்தப்படுகிறது. இது நான்கு வருடக் கற்கைநெறியாகும். தற்போது நீங்கள் மட்டம் மூன்று பருவம் இரண்டிற்கு வருகை தந்துள்ளீர்கள்.

LEU 3312 – உலக இலக்கியங்கள் - அறிமுகம் என்ற இந்தப் பாடநெறி ஒரு தெரிவுக்குரியபாடமாகும். இது மட்டம் 03, பருவம் 02 இல் மூன்று திறமை மட்டங்களைக்கொண்டுள்ளது. இதில் நீங்கள் தமிழ் உலக இலக்கியம் எனும் கருத்தாக்கம், கிரேக்கஇலக்கியம், ஆங்கில இலக்கியம், ரஷ்ய இலக்கியம், பிரெஞ்சு இலக்கியம், சீனஇலக்கியம், அரபு இலக்கியம், ஆபிரிக்க இலக்கியம் மற்றும் உலகப்புகழ் பெற்றபடைப்பாளிகள் எனும் விடயங்களினுடைய விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளும்
நோக்கில் இப்பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மட்டம் 03இல் இருந்து மட்டம் 04 இற்கு தகுதி பெறுவதற்குப் பூர்த்திசெய்யப்படவேண்டிய திறமை மட்டம் - மட்டம் 03இல் கட்டாயம் 30 திறமை மட்டங்களைப் (பதிவு செய்த அனைத்துப் பாடங்களும்) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.